பொறுப்பாசிரியர்

 ஸ்ரீலஸ்ரீ

தோழிகள் அனைவரும் நலமா?

வெயிலோடு தேர்தல் ஜூரமும், கிரிக்கெட் ஜூரமும் சேர்ந்ததால் தமிழ்நாட்டு மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை குளிர்விப்பதற்காக அரசியல் கட்சிகள் தினம் ஒரு ‘இலவசத்தை’ அறிவித்து வருகிறார்கள். 


ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தனை பொருட்களையும் இலவசமாகத் தருவதாக பெருமைப்படும் அரசியல் கட்சிகள் ‘இலவசக் கல்வி’யைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.


அரசியல் கட்சிகள் தரும் இலவசங்கள் மக்களை மகிழ்விக்கலாம். ஆனால் உழைக்காமல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியுமா என்பதை சிந்திக்கவேண்டும்.  இந்த இலவசங்களை கொடுப்பதற்கு ஆகும் செலவை ஈடுகட்டும் விதத்தில்  அத்யாவசியப் பொருட்களின் விலையை, வரியைக் கூட்டுவார்கள். அதனால் பாதிக்கப்படப்போவது நடுத்தர மக்கள்தான். இலவசங்களை வாரி வாரி வழங்குவோம் என்று வாக்கு கொடுக்கும் அரசியல் கட்சிகள்  ‘நல்லாட்சி தருவோம்’ என்ற வாக்குறுதியை கொடுத்ததா பாருங்கள்...


இவ்வளவு பிரச்னை இருந்தாலும், இவர்களில்  யார் சிறந்தவர் என்று யோசித்து உங்களுக்கு இருக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் அவர்களுக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் அந்த உரிமையையும்  கட்சிகளிடம் இழந்து விடுவோம்.
கிரிக்கெட்டையும், வாழ்க்கையையும் இணைத்து அங்கம்பாக்கம் சந்திராமணி ஒரு கவிதை எழுதியுள்ளார். படித்து ரசியுங்கள்.


மைதானம் உலகம்
மேட்ச் வாழ்க்கை
ஓவர்ஸ் மனித ஆயுள்!
அம்பயர்ஸ் தலைவிதி
தேர்ட் அம்பயர் கர்மபலன்
பிளேயர்ஸ் குடும்பம், உறவு...
பேட்டிங் தொழில்
பவுலிங் சவால்
எல்லாருக்கும் சதம் இலக்கு
அவரவர் ஆட்டப்படி
ஆயுசு ரன்கள்!
சிங்கிள் ரன் தன் முயற்சி
இரட்டை ரன் கடின உழைப்பு
ஃபோர் ரன் அதிர்ஷ்டம்
சிக்ஸர் ராஜயோகம்
ரன் அவுட் என்பது
தானே உருவாக்கிய தீயபழக்கம்
எல்பிடபிள்யூ தற்கொலை
கேட்ச் எதிர்பாராத விபத்து
போல்டு வாழ்க்கை முடிவு
கிரிக்கெட் விளையாட்டும்
வாழ்க்கை விளையாட்டும் ஒன்று...
உலகம் போல மைதானம் - அதில்
மேட்ச்சைப்போல வாழ்க்கை
வந்து வந்து போகும்...
எதுவும் நடக்கும்
வாழ்க்கையில்
கிரிக்கெட்டில்...
சொல்லி அடித்தவர்களுண்டு
விளையாட்டாய்
விளையாடிப் போனவர்களுண்டு
சிலருக்குப் பிடித்த விளையாட்டு
சிலருக்குப் பிடிக்காதவிளையாட்டு
இருந்தென்ன பயந்தென்ன
ஆட்டிவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!
 
அன்புடன்
ஸ்ரீ

****************************



அன்பு தோழியே...


வணக்கம். தோழிகள் சிலர் உரிமையோடு தங்கள் சொந்த சிரமங்களை எழுத்தால் என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள். படிக்கிறீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், மனபாரத்தை கொஞ்சமேனும் இறக்கி வைக்க இதை உங்களுக்கு எழுதுகிறேன் என்ற குறிப்பும் கொடுக்கிறார்கள். நன்றி தோழிகளே. என் வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கும்... தோழமையோடு சுக துக்கத்தை பகிர்ந்து கொள்ள முன்வருவதற் கும்!


சின்னச் சின்ன மன வருத்தங்கள்; ஏமாற்றங்கள்; திடீர் சிக்கல்கள்... என்று ஒவ்வொரு நாளையும் பதட்டத்துடன் கடப்பதாக சொல்லும் தோழிகளே, வாழ்க்கையில் நம்பிக்கையான விஷயங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். நம்பிக்கை என்ற பூந்தோட்டம்தான் வாழ்க்கை. அதில் மலரும் பூக்கள்தான் நீங்கள், நான், எல்லாரும்.
ஒரு கிராமத்தில் கடும் வறட்சி. மக்கள் எல்லாரும் சேர்ந்து வருணஜெபம் செய்யலாம் என்று முடிவு செய்கிறார்கள். ‘வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை எல்லாரும் சாவடிக்கு வந்து விடுங்கள்’ என்ற அறிவிப்பு தண்டோரா போட்டு சொல்லப்படுகிறது. அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. எல்லாரும் சாவடிக்கு திரண்டு வந்தார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டும், கையோடு குடை எடுத்து வந்தான்.
அதுதான் நம்பிக்கை!
ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறீர்கள். உங்கள் தலைக்கு மேல் தூக்கி போடுகிறீர்கள். அப்போதும் பாருங்கள். அந்தக்குழந்தை பயப்படாமல் சிரிக்கும்.


எப்படியும் பிடித்து விடுவீர்கள் என்று அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை!


தினமும் இரவில் தூங்கச் செல்கிறோம். எந்த உத்தரவாதமும் இல்லை, நாளை காலை உயிருடன் விழுத்தெழுவோம் என்று. ஆனாலும், அடுத்த நாள் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை தூங்கச் செல்லும் முன் திட்டமிடுகிறோம்.


அதுவும் நம்பிக்கை!


இப்படி வாழ்க்கையில் நாம் நிறைய நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கைகள் தீவிரமாக இருக்கும்போது நம்பியது நடக்கும். நம்பலாம். நம்புவோம்.  


ஸ்நேகங்களுடன்,
பொ. ஆ!


****************************

ஸ்ரீ கேள்வி பதில்


+எனக்கு மட்டும் நிறைய சோதனைகள் வருகின்றது. என்ன செய்ய?
கனகவல்லி, ஈரோடு.
* வாழ்த்துக்கள். சாதிக்க நினைப்பவர்கள் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுவார்கள்.

+வயசு பொருத்தம் இல்லாமலும் ஜோடி பொருத்தம் இல்லாமலும் திருமணம் செய்கிறார்களே?
- டி.ஆர். ஹலீமா ஹாஜா, பொதக்குடி.
* காதலுக்குத்தான் சொல்வார்கள். சில கல்யாணத்துக்கும் கண் இருக்காது போலும்.

+இயற்கை நம்மை தண்டிப்பது எதனால்? ஏன்?
- ப. மகாலட்சுமி, பெரம்பலூர்.
* எப்போது தண்டித்திருக்கிறது? அது இயல்பாகத்தான் இருக்கிறது. இயற்கையில் மாற்றங்களும் இயற்கையானதே. அப்படி மாற்றம் வரும்போது, தகவமைத்துக் கொள்ளாத நேரங்களில் நமக்கு பாதிப்பு வருகிறது. பழியை இயற்கை மீது போடுகிறோம். நியாயமா?

+பெண்ணின் பாதுகாப்பு திருமணமா? படிப்பா?
ஆ. தென்வடிவு, பள்ளிகொண்டா.
* மனஉறுதி.

+பிறந்த நாள் கொண்டாடுவதை இருவிதமாக செய்கிறார்கள். நட்சத்திர அடிப்படையில் சிலரும் ஆங்கில தேதி அடிப்படையில் சிலரும் கொண்டாடுகிறார்கள். எது சரி?
வே.கமலா, சேலம்-3.
* பிறந்த நாளை விட சாதனை செய்த நாளை கொண்டாடுவதே சரி.

+ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை யாரும் காட்டுவதில்லையே, ஏன்?
எஸ். வாணி, திருச்சி-9.
* மறு கன்னத்திலும் அடி விழுமே!

+அன்னையர் தினம் முதியோர் இல்லங் களில் கொண்டாடுவது பற்றி...
- ந. சரோஜா, கும்பகோணம்.
* ரோஜா பூவை நசுக்கி நுகர்ந்து பார்ப்பது போல!

+விவாகரத்து ஆன பிறகும் நண்பர்களாக பழகுவது இயலுமா? முடியும் என்றால் எதற்கு விவாகரத்து?
ஆர். நாகம்மாள் கிருஷ்ணஸ்வாமி, திண்டல்.
* முடியாது. முடியும் என்று சொல்பவர்கள் நல்ல நடிகர்கள்.

+அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மகுடம் சூட்டப்படும்போது, அழுவது ஏன்?
கவிதா வெங்கடேசன், தோட்டப்பாளையம்.
* இந்த சுஸ்மிதா சென்னை சொல்லணும். அவர்தான் ஆரம்பித்து வைத்தார். அழகான உதடுகளை குவித்து ‘ஓ’ சொல்வது அழுது வைக்க, அப்புறம் வந்தவர்கள் எல்லாம் அழுவதை மரபாக்கிக் கொண்டார்கள்.

+குழந்தை, கணவர்... இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப் பது?
ஆர்.பத்மா ராஜாராம், ஜீயபுரம்.
* உங்களுக்கு. உங்களில் அவர்கள் இருவருமே
அடக்கம் என்பதால்!


பரிசு 1000

+அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க வழங்கும் அனுமதிதான் ஓட்டுகளா?
- க.கலா, பந்தநல்லூர்.
* விவசாயம் செய்யச் சொல்லித்தான் நிலத்தை ஒத்திக்கு விடுகிறோம். அவர்கள் கஞ்சா வளர்த்து விடுகிறார்கள். 

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Hai Shri,

    I Am Maheswari Satheesh. I am 23yrs old.I have Female baby of six months.She had Cleft Lip operation on November in chennai.

    Doctor said that i couldnt feed to my child after operation.But now she is so slim.She is also affected by cold and cough many times.Doctor said that she doesnt have energy to manage it.I am very sad to tell this to you.

    Mothers are happy,only they are giving milk to her child.But i counldnt happy that i dont give milk to my child.

    I expect that you told good result to me.


    . Thanking You

    Yours Lovingly
    Maheswari

    ReplyDelete
  3. நான் பெண்கள் மலர் WhatsApp group சேசேர விரும்புகிறேன். எப்படி?

    ReplyDelete
  4. Mam,
    Good morning. My name is Santhi. I am from Tiruvarur. I am a post graduate. I have very much interest in reading and writing. I have started my writing when I was 11 years old. But unfortunately i couldn't get a chance to send it to any magazine. Dinamalar siruvarmalar is my first impression to read and write. After that it is continued by varamalar, pengal malar, bakthimalar and other magazines too. Now I want to send my post to pengal malar. Can I do it? If it is possible means kindly send a reply.
    Thanking you,
    Regards,
    J. santhi.

    ReplyDelete