கீர்த்தன்யா |
அடுத்தது, செல்ல பெயர்கள் என்ற பெயரில் நாம் அழைக்கும் சிலவகையான பெயர்கள்...
4. செல்ல பெயர்கள்: குள்ளா, பல்லி, ஒல்லிக்குச்சி, கருப்பா, கண்ணாடி, குண்டுக்குட்டி... இப்படிப்பட்ட செல்லப் பெயர்களும் சுயமதிப்பைக் குலைக்கும். உங்களுக்கு வேண்டுமானால் இவை அர்த்தமற்ற, சாதாரண பெயராக இருக்கலாம். ஆனால் இப்படி அழைக்கப்படும் குழந்தைக்கு இந்தப் பெயர்களே அவர்களுடைய குறைகளை மறக்கவிடாமல் திரும்ப திரும்ப மனதில் பதியவைக்கும். இந்த வார்த்தைகள், ‘நாம் எவ்வளவு அசிங்கமாக இருக்கிறோம், நாம் எவ்வளவு உபயோகமற்று இருக்கிறோம்’ என்பதை அவர்களிடம் அன்றாடம் உணரவைத்து வருத்தமுற செய்யும்.
சுயமதிப்பைக் குறைக்கும் எந்தப் பெயரையும் பெற்றோர்கள் உபயோகிக்க கூடாது.
நான் சில தினங்களுக்கு முன் சேலம் செல்ல நேர்ந்தது. எனது பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருந்த ஒருவர் அவரது அண்ணன் வீட்டில் என்னை தங்க வைத்திருந்தார். அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன். அவனை எல்லாருமே செல்லமாக ‘ஜிஃபி’ என்று அழைத்துக் கொண்டிருந்தனர். இது என்ன வித்தியாசமான பெயர் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர்கள் சொன்ன பதில் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. அவனுக்கு கழுத்து துருத்திக்கொண்டு நீளமாக இருக்கிறது, அதனால் ஒட்டகசிவிங்கியின் ஆங்கிலப்பெயரான ‘ஜிராபியை’ சுருக்கி ‘ஜிஃபி’ என்று கூப்பிடுவதாக கூறினர். இப்படிக்கூடவா யோசிப்பர் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
உங்கள் மகன் அல்லது மகனை நீங்கள் கூப்பிடும் செல்லப்பெயர்களில் எதிர்மறை அர்த்தம் தொனிக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் அது அவர்களின் சிந்தையில் தங்களைப் பற்றி தான் தீட்டும் ஓவியத்தில் நிச்சயம் ஒரு அலங்கோலத்தை தோற்றுவிக்கும்.
ஒரு முறை உங்களுடைய சிறுவயதை நினைவுபடுத்திப் பாருங்கள்... உங்களுடைய குறையை சுட்டிக்காட்டும் வண்ணம் யாராவது உங்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டியிருந்தால் அது உங்கள் மனதை எப்படி கஷ்டப்படுத்தியது? அந்த வார்த்தைகள் எப்படி உங்கள் மனதில் பசைபோட்டால்போல் ஒட்டிக் கொண்டு சிந்தையை விட்டு அகலாது எத்தனை ஆண்டுகள் பாடாய் படுத்தியது?
நினைவு கொள்ளுங்கள்: வார்த்தைகள், ஒரு கூண்டில் அடைத்து வைத்த சிறுபறவைகள் போன்றவை. ஒரு முறை வெளியே விட்டுவிட்டால் ஒரு போதும் அவற்றை திரும்பப்பெற முடியாது. எதிர்மறை சொற்கள், வரிகள், செல்லப்பெயர்கள் என்பவை உங்கள் குழந்தைக்கு நீங்கள் எழுதிவைக்கும், நீடித்து நிற்கும் சொத்துக்கள்.
5. வளர்ச்சியடையாதவர்கள் என்ற நோக்கத்தில் அவர்களை அணுகுவது:
வாழ்க்கைக்காக ஆயத்தம் செய்து கொண்டிருப்பவர்கள் என்று குழந்தைகளைக் கருதுவதுதான் ‘வளர்ச்சியடையாதவர்கள்’ என்று கருதும் போக்கு.
இது உங்களுடைய வாசகங்களில் இப்படி வெளிப்படும் : ‘நீ வளர்ந்த பிறகு
உனக்கு நான் சொல்றது புரியும்’... ‘நீ ரொம்ப சின்னபையன், இதெல்லாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது’... ‘என்னிக்காவது இதெல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு அம்மாவை பாராட்டுவ’... ‘சொல்றதை செய், ஏன் எதுக்குன்னு சொல்லிப் புரியவைக்கிற வயசு உனக்கு இன்னும் வரல’. இந்த மாதிரியான வாசகங்கள் குழந்தைகளுக்கு தாங்கள் முழுமனிதன் இல்லை, குறையோடு இருப்பவர்கள் என்ற கருத்தை அவர்கள் மனதில் ஆழப்பதிக்கும். இப்படி சுயமதிப்பைக் குறைக்கும் விஷயத்தை குழந்தைக்குள் பதிய வைப்பது சரியல்ல. இதற்குப் பதிலாக என்ன செய்யலாம்? அவர்கள் வயதுக்கு தகுந்த விளக்கத்தை ‘நீ சின்னவன்’ என்ற அடைமொழியை சேர்த்துக் கொள்ளாமல் சொல்லலாம்!
(விளையாடுவோம்)
pennaga pirandadume kudumbathai nalla muraiyil peni kakkum poruppu yarum sollamale pengalukul undanadhu. ulagathin anaithu nallavaikalai thuvakki vaippaval pen than, theeyavaikalai mudithu vaippavalum avale than
ReplyDeletemk;kh
ReplyDeletevd; capNuhL fye;J tpl;l NtisapYk; - eP
vd; cldpy;iy vDk; cz;ik RLfpd;wJ
fly; jhz;b nrd;wpUe;jhy; clNd Nrh;e;jpUg;Ngd;
cly; ePq;fp nrd;whNa cid Nru vd;d nra;Ntd;?
cd; FUjpapy; Fspj;J te;Njd; eP fhag;gl;lha;
cid nfhy;ypapy; Fspf;f itj;J ehd; fhag;gl;Nld;!
vd; rpwFfs; Kisj;j Neuk;
cd; rpwFfs; tphpj;jNjNdh?